வடக்கு தெரு ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில்
வடக்கு தெரு ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில்
திசையன்விளை - 2025
திசையன்விளை - 2025
வடக்கு தெரு ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீசுடலைஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வம், குலதெய்வமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடப்பட்டு வருகின்றார். ஸ்ரீசுடலைஆண்டவர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிகப்பெரிய அளவில் கொடைவிழா நடத்தப்பட்டு வருகின்றது. திசையன்விளை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.
ஸ்ரீசுடலை ஆண்டவர் திருக்கோயில் ஆவணி பெருங் கொடைவிழா நிகழும் மங்கள கரமான 2025 ஆகஸ்ட் மாதம் 17 முதல் 22 தேதி வரை (ஆவணி 1 முதல் 6 வரை) வெகு சிறப்புடன் நடைபெற இருக்கின்றது. யாவரும் வருகை தந்து விழாவினைக் கண்டு இன்புற்று இறையருள் பெற தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக, அய்யன் அருள் பெறுக
நன்றி...